ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கும் இந்தியா

148
0
Spread the love

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உள்விவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ என்ற போர்க்கப்பல் காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது.

இதில் குறித்த கப்பல் கடலில் மூழ்கியதுடன், அதிலிருந்த 32 பேரை உயிருடன் மீட்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கமைய, மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டன.

இதேவேளை, தாம் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலிலேயே குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா நேற்றிரவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here