மன்னாரில் பாரம்பரிய சிலம்பக்கலை ஆரம்பம்

69
0
Spread the love

 

பாரம்பரிய தமிழர் சிலம்பக் கலையின் ஆரம்ப விழா. நேற்று முன்தினம் (08.03) ஞாயிறு காலை 11.00 மணியளவில்
மன்னார் VMCT கலை மன்றத்தில் நடைபெற்றது.

இதன் போது பாரம்பரிய தமிழர் ஆயுதக் கலையான சிலம்பம் பயிற்சியானது 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்ற
பிரபல ஆசான் பாபு மாஸ்டரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சிலம்ப பயிற்சிகள் தலமை ஆசிரியர் அன்ரன் பெசன்பேர்க் மெல்சின் தலமையில் பிரதி சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அத்துடன்
வாள் வீச்சு, வேர் கம்பு,சுருள் வாள், மடு.போன்ற கலைகளும் இங்கே கற்பிக்கப்படவுள்ளது.

பொறியியலாளர் விமலேஸ்வரன் முயற்சியில் உருவாகிய இந்த VMCT கலை மன்றத்தில் ஏற்கனவே ஓகன்,வயலின்,சித்திரம்,பரதம், சதுரங்கம், கராத்தே, தகவல் தொழில்நுட்பம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருவதுடன் இன்றைய தினத்தில் சிலம்பக்கலையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here