சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

78
0
Spread the love

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில், மன்னர் வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயில் படிகளுக்கு அருகில் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான சிற்பங்கள் பொறிக்கப்பட்ட, 1,000 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ‘சண்டகலா’ என்ற கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here