எரிபொருள் QR குறியீடு வழமைக்கு

66
0
Spread the love

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் தற்போது தடையின்றி இயங்கி வருவதாக அந்த அமைச்சு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக நடைமுறையை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய படிநிலைகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, வாகன உரிமையாளர்கள் தாங்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள் என்பதை அடையாளம் கண்டு, அதற்கேற்ப QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திலோ எவ்வித மாற்றமும் இல்லாதவர்கள், தங்களின் பழைய QR குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னர் பதிவு செய்து, ஆனால் தற்போது QR குறியீட்டைத் தொலைத்தவர்கள் அல்லது தொலைபேசியிலிருந்து நீக்கியவர்கள் தகவல்கள் மாறாத பட்சத்தில் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கணினியில் உள்நுழைந்து, தொலைபேசிக்கு வரும் கடவுச்சொல் மூலம் பழைய QR குறியீட்டை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள், புதிதாக வாகனம் வாங்கியவர்கள் (உரிமை மாற்றம்) அல்லது முன்னர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தைப் தற்போது பயன்படுத்தாதவர்கள் ஆகியோர் கணினியில் புதிதாகப் பதிவு செய்தல் அவசியமாகும்.

எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்தவும் இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலதிக விபரங்கள் அல்லது இது தொடர்பான சிக்கல்களுக்கு, அரச தகவல் மையத்தின் 1919 என்ற விசேட இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here