14 மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் எச்சரிக்கை

58
0
Spread the love

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளை (16.03) வெப்பச் சுட்டியானது மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here