ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு

26
0
Spread the love

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு ஊடக சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here