பயணிகளுடன் தரக்குறைவான உரையாடலை மேற்கொண்டமை மற்றும் திடீர் சோதனையில் ஈடுபட்ட விதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை அவமதித்தமை போன்ற இரு வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு எட்டு நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 07.03.2026 அன்று பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டபோது, குற்றப்பத்திரிகை வழங்க குறித்த நடத்துநரின் அனுமதிப்பத்திரத்தைக் கோரிய வேளை அந்த அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்தமையும்.
26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவையின்போது அவர் பயணிகளிடம் தரக்குறைவான பேசியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நடத்துநர் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் நடத்துநராகவோ, சாரதியாகவோ கடமையாற்றத் தகுதியற்றவர் என இனங்காணப்பட்டமையால், அவருக்கு வடக்கு மாகாணத்தில் எவ்வித பயணிகள் பேருந்திலும் கடமையாற்ற முடியாதவாறு 8 நாட்கள் தொடர்ச்சியான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் . இந்தத் தடையை மீறிச் செயற்பட்டால், குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பேருந்து உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ் விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒழுக்க மீறல்கள் குறித்து பயணிகள் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் விதமாக whatsapp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன்
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் இவ்வாறான ஒழுக்க மீறல்கள் மற்றும் விதிமீறல்களுக்கு எதிராக முன்னரும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .






