நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

29
0
Spread the love

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30.03) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த காரைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது முன்னோக்கிச் செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here