குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

21
0
Spread the love

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த சைலன்சர்களுக்குள் இருந்து 25 கிலோ 500 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான “சிவப்பு வழி” ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here