மட்டக்குளி கொலை தொடர்பில் 09 சந்தேகநபர்கள் கைது

58
0
Spread the love

மட்டக்குளி – கெமுனுபுர பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி மட்டக்குளி – கெமுனுபுர பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இருதரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை நேற்று (2) கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 19 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here