அலங்காரச் செடிகளை கடத்தி வந்த வியாபாரி கைது

74
0
Spread the love

07 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அலங்காரச் செடிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த விமான பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேயங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 அலங்காரச் செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here