யாழ் – தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

50
0
Spread the love

யாழ்ப்பாணம் – தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (12.04) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள ஆலயம் ஒன்றின் நிர்மாணப்பணிகளின் போது, நேற்று மேலும் இரண்டு இளைஞர்களுடன் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபரை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here