பணம் தொடர்பிலான முறுகல் காரணமாக தனது தாயை கொலை செய்த மகனை கைதுசெய்த சம்பவம் சித்தாண்டி பகுதியில் பதிவாகியுள்ளது. 40 வயதான தாயொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்திவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 04 சந்தைக்கு அருகில் நேற்று மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பணம் காரணமாக இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்ட நிலையில் மகன் தாயை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.






