மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவர் கண்காட்சி – வீடியோ

15
0
Spread the love

மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று (21.04) செவ்வாய்க்கிழமை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவர் வழிகாட்டல் கண்காட்சி மிக விமர்சையாக நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு தங்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஆராய்ந்தனர்.

இக்கண்காட்சி மூலம் அரச மற்றும் தனியார் துறைகளின் பல்வேறு நிறுவனங்கள் தங்களது வேலைவாய்ப்புகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்முனைவர் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தின. இளைஞர் யுவதிகள் தங்கள் திறன்களுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைப் பற்றி நேரடியாக தகவல்களைப் பெற்றதுடன், பலர் உடனடியாக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டனர்.

மன்னார் பிரதேச செயலகம், மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திணைக்களங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் , அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மதகுருமார்கள் இளைஞர் யுவதிகள் என பலர் பங்கேற்றனர்.

இளைஞர் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்நிகழ்வானது முக்கியமான தளமாக அமையும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது