நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

97
0
Spread the love

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26.04) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையஅரச்சுனா வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இராமநாதன் அர்ச்சுனாவின் கைத்துப்பாக்கியும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here