விமான நிலையத்தில் சுமார் 59 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – சீன நாட்டவர் கைது

13
0
Spread the love

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 59 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சிகரெட் தொகையை, இந்தியாவின் சென்னை நகருக்குக் கொண்டு சென்று, பின்னர் இண்டிகோ (IndiGo) விமான விமானம் மூலம் அவர் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

சந்தேகநபரின் 2 பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 39 ஆயிரத்து 400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கைதானவர் 40 வயதான சீன நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here