நியூயோர்க்கில் நடைபெற்ற ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி

5
0
Spread the love

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சியின் மூன்றாம் கட்டம் நியூயோர்க் நகரில் நடைபெற்றது.

இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அனுசரணையுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் இதனை இணைந்து இந்த கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் அழகை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இம்முறை ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் அலுவலக பிரதானி கேர்ட்னி ரட்ரே (Courtenay Rattray) இதில் பிரதம அதிதியாகக் பங்கேற்றிருந்தார்.

இதன்போது இலங்கையின் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்களின் விருது வென்ற பல புகைப்படங்கள், நாட்டின் எழிலை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து இந்த புகைப்படக் கண்காட்சிக்கு இதன்போது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கிய பங்களிப்பிற்காக, அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கத்தின் தலைவர் சூரிய பெரேரா உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படக் கண்காட்சிக்கு இணையாக ‘பூமியைக் காப்போம்’ எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கண்காட்சித் தொடரின் இறுதி நிகழ்வு இன்று (02.05) வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here