காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 

33
0
Spread the love

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here