தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் சற்று முன்னர் பதவியேற்றார்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.
வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது.
பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என விஜய் உறுதிமொழியளிக்க ஆரம்பித்ததும் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் எழுச்சியுடன் குரலெழுப்பினர்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர்,தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







