இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டகாங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பலரும் பங்கேற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் நேற்று கண்ணீர் புகைப் பிரயோகிக்கப்பட்டது .
இந்நிலையில் பொலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதி இன்றி பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.







