மன்னாரில் காணி தொடர்பான இலவச சட்ட ஆலோசனை முகாம்

31
0
Spread the love

மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாடு செய்துள்ள இலவச சட்ட ஆலோசனை முகாம் நாளை (13.05 ) புதன்கிழமை மற்றும் ( 14 .05) வியாழக்கிழமை மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை, மன்னார் மெசிடோ (MSEDO) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக ஆலோசகரும், உதவிக்காணி ஆணையாளருமான க. குருநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

எனவே பொதுமக்கள் இதிலே கலந்து கொண்டு காணிக் கொள்வனவு மற்றும் விற்பனை தொடர்பான சட்ட நடைமுறைகள், தனியார் மற்றும் அரச காணி ஆவணங்களைச் சரிபார்த்தல், லீஸ் காணி தொடர்பான சிக்கல்கள், புதிய காணிகளுக்கான விண்ணப்ப முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணி விற்பனையின் போது கவனிக்க வேண்டிய சட்ட மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்தும் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக மெசிடோ (MSEDO) நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,ஆலோசனை பெற விரும்பும் பொதுமக்கள், தங்களிடம் உள்ள காணி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், குறிப்பாக பத்திரங்கள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கையோடு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 077 800 8915 அல்லது 076 528 6318 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மக்களிடம் மெசிடோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here