மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

130
0
Spread the love

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று( 12.06) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் விவசாயம் ,மீன்பிடி போக்குவரத்து வசதிகள் , குடிநீர் வசதி ,ஆசிரிய பற்றாக்குறை , கட்டட நிர்மானங்கள், வீதிப்புனரமைப்பு , சட்டவிரோத மண்ணகழ்வு போன்ற பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கடந்த மாதத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டமையால் அதன் தொடர்ச்சியான பல விடயங்கள் இந்த கூட்டத்தில் முழுமையாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறிப்பாக கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் சிறு போகம் செய்கின்ற விவசாயிகளுக்கு ஈவு பிரித்துக் கொடுத்தல் ,எல்.ஆர்.சி காணிகள் , மீனவர்களுக்கு இறங்குதுறை அமைத்தல் மற்றும் பல்வேறு திணைக்களங்கள் சார்ந்த பல்வேறுப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

பொருளாதார கூட்டுறவு பிரதி அமைச்சரும் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான உபாலி சமரசங்க தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ,மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களானமயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,கே.காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டதோடு மன்னார் மாவட்டத்தின் அனைத்து அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், முப்படை அதிகாரிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here