வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “வட்டுக்கோட்டை பிரகடனம் பொன்விழா ஆரம்ப நிகழ்வு” நாளை 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் அருகில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
1976 ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டு நினைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வை “வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக்குழு” ஏற்பாடு செய்துள்ளது.







