நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதுளை,கொழும்பு காலி கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







