மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

5
0
Spread the love

பாடசாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்
பிரிவு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து சுகாதாரத் துறைகள் வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அறிக்கையின்படி, நோயை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ நடைமுறைகள், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது அவதானமாக இருத்தல், நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தல், வீடுகளில் காற்றோட்டத்தை உறுதி செய்தல் போன்ற நடைமுறைகள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவல் அதிகமாக காணப்படுவதாகவும், காய்ச்சல், தலைவலி, வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த நோய் 7 நாட்களுக்குள் குணமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here