இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

28
0
Spread the love

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக
இராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (12) கியூ பிரிவு பொலிஸார் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரியமான் கடற்கரை அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
அட்டைப் பெட்டிகளை பொலிஸார் சோதனை செய்தனர்.

அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 08 பெட்டிகளில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி
வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றிய கியூ பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக இராமநாதபுரம்
சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த தோப்பின் உரிமையாளர் யார் என்பது குறித்து அப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகுகள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என கடற்கரை ஓரம் க்யூ பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here