தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) நிர்வாகக் குழு உறுப்பினராக பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில், 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் பிரிவு 3(1)(b)-இன் கீழ், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஜனாதிபதி இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் நிலவிய வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வரும் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் போக்குவரத்து துறையில் கொண்டுள்ள அனுபவம் மற்றும் பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்தப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







