மன்னார் நகர பேருந்து நிலையப் பகுதியில் உணவகம் மற்றும் பழ விற்பனை நிலையம் நடத்தி வரும் தொழிலதிபர் முஹமட் பாஹீம் மீது நேற்று (02.07) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் போது மேலும் இருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த முஹமட் பாஹீம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு வியாபாரிகளுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த வணிகத் தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்ற நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








