தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ்

5
0
Spread the love

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருபவர்களால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கிடைக்காது என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈ.பி.டி.பி. முன்வைத்த மாற்று கொள்கைகளே நடைமுறைக்குச் சாத்தியமானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக கூறிய அவர்

மாகாணங்களை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வை வலுப்படுத்தி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது, சிலர் தமிழக தலைவர்களை சந்தித்து சர்வதேச விசாரணை, சமஷ்டி என்று சுயலாப அரசியலை முன்னெடுப்பதாக கூறிய ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவை மக்களுக்கு எந்த நன்மைகளையும் பெற்றுத்தராது என சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here