மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம்

32
0
Spread the love

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்
கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இன்று (04.07.2026) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் இந்த போராட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை
வெளிப்படுத்தினர்.

இலங்கையில் போர் நிறைவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர

நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் தங்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டக்கார்கள் வலியுறுத்தினர்.

சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும்
தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here