சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது

73
0
Spread the love

ஹோமாகம பகுதியில் அதிக சத்தத்துடன், வேகமாகச் சென்ற 16 மோட்டார் சைக்கிள்களின் சாராதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 16 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சைலன்சர்கள் மாற்றப்பட்டிருந்ததுடன் கண்ணாடிகள் அகற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலக்கத் தகடுகள் இல்லாமை போன்ற பல்வேறு சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் (RMV) சமர்ப்பிப்பதற்காகப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here