செம்மணியில் இன்று புதிதாக 06 என்பு கூடுகள் அடையாளம்

87
0
Spread the love

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here