காயமடைந்த அருட் சகோதரி ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் 

102
0
Spread the love

கொழும்பிலிருந்து அருட் சகோதரிகளை ஏற்றி வந்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று மன்னார் பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (22.07) புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அருட்சகோதரிகள் ஐவர் காயமடைந்து
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் சௌத்பார் சி.ஐ.சி கன்னிகாஸ்திரிகள் மடத்தினை சேர்ந்த அருட்சகோதரிகளே இவ்வாறு விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது ஆறு அருட் சகோதரிகள் வாகனத்தில் பயணித்த நிலையில் ஐவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் என பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here