வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல் மற்றும் உள மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இலவசமாக நடத்தப்பட்டுவரும் யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு புதிய பிரிவு ஆரம்பமாகவுள்ளது.
வாராந்தம் சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இக்கற்கைநெறியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும். சுமார் மூன்று மாத காலத்தை கொண்ட இந்த அடிப்படைக் கற்கைநெறியை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
கற்கைநெறியில் இணைந்து பயில விரும்புவோர் ஆரம்ப தினத்தன்று நேரடியாக வருகை தந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்புகளில் இணைந்துகொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களை 021 222 2203 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.







