நாட்டின் பல பாகங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பு

27
0
Spread the love

வங்காள விரிகுடாப் பகுதியில் நிலவும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் இன்றும் (27.10.2026) ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

மேற்கு, சபரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற் பகல் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய அவதானிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. எனவே, இடி மின்னல் தாக்கங்கள் மற்றும் சீரற்ற வானிலையினால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here