60 இலட்சம் ரூபா பெறுமதியான சுருக்கு வலைகளுடன் இளைஞர் கைது

19
0
Spread the love

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பொலிஸார் கைப்பற்றியதுடன், இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று (ஒக்டோபர் 25) இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செட்டிபாளையம் பகுதியில் உள்ள குறித்த வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், மூன்று சுருக்கு வலைகளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் நீண்டகாலமாகச் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (ஒக்டோபர் 26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here