நாளை முதல் கட்டாயம்: இலங்கை மற்றும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

14
0
Spread the love

நாட்டில் நாளை (நவம்பர் 01) முதல் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை வங்கி (Bank of Ceylon) மற்றும் மக்கள் வங்கி (People’s Bank) ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளன.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:
எங்கு எங்கு கட்டாயம்?: வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கொன்றைத் திறத்தல், கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் உரிமத்தைப் புதுப்பித்தல், காணிப் பதிவு மற்றும் வணிகப் பதிவு போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி அறிவுறுத்தல்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சுற்றறிக்கையின்படி (SEC/2026/E/07), எந்தவொரு வங்கிக் கணக்கைத் திறக்கும்போதும் அல்லது கடன் அட்டை பெறும்போதும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என இலங்கை வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களும் தமக்கு அருகிலுள்ள கிளைக்குச் சென்று தமது TIN இலக்கத்தைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் வங்கி அறிவுறுத்தல்: புதிய கணக்குகளைத் திறப்பதற்கும் கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது TIN சான்றிதழ் நகலை உடனடியாக வங்கியுடன் இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நவம்பர் 1ஆம் திகதி முதல் வங்கிச் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த புதிய விதிமுறையைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here