நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாகக் கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களூடாக வெள்ளநீர் கரைபுரண்டோடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நகரப் பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாகனப் போக்குவரத்துக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் உரிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் உரிய தரப்பினர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளனர்







