ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க இந்தியா உதவி

86
0
Spread the love

 

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று சனிக்கிழமை (21) இந்த அறிக்கையை வெளியிட்டது.

அத்துடன், ஈரானில் உள்ள நேபாளை சேர்ந்தோருக்கும் இந்தியா இதே உதவியை வழங்குகிறது.

‘ஆபரேஷன் இண்டஸ்’ திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here