தங்காலை – பரவிவெல்ல துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் உடல் இன்று (29.06) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை, பல்லேமலால பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமற் போன மற்றொரு நபரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







