சிலாபம் – புத்தளம் வீதியில் விபத்துக்குள்ளான பஸ் – 21 பேர் காயம்

53
0
Spread the love

 

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று
விபத்துக்குள்ளானதில் 21 காயமடைந்துள்ளனர்.

சிலாபம் – புத்தளம் வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அண்மையில் இன்று பிற்பகல் (04.07)இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here