வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட, 25,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும், காணியற்ற மக்களுக்கும், புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்று வாழும் குடும்பங்களின் நன்மை கருதியும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்தவகையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் , கூகுள் வரைபடத்தின் மூலம், வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.







