சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







