கெஹெலிய உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை

69
0
Spread the love

 

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, 13 குற்றப்பத்திரிகைகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here