இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

60
0
Spread the love

 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை (12.07) விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இதன்போது காங்கேசன்துறை வட மேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here