மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை

57
0
Spread the love

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது, மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here