“பாத்திய” என்றழைக்கப்படும் யானை உயிரிழப்பு

54
0
Spread the love

 

குருணாகல் – பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த “பாத்திய” என்ற காட்டு யானை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை அறிவியல் பேராசிரியர் அசோக தங்கல்ல தலைமையில் “பாத்திய”என்ற காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

“பாத்திய” என்றழைக்கப்படும் இந்த யானை 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கது.

சிகிச்சை பெற்று வந்த காலத்தில் “பாத்திய” என்ற காட்டு யானை பல தடவைகள் நீர்நிலைகளில் தவறி விழுந்ததால் அதன் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து “பாத்திய” என்ற காட்டு யானைக்கு உணவு அளித்து அதனை பாதுகாத்து வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here