தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல் – ஐவர் வைத்தியசாலையில்

60
0
Spread the love

 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் தாக்கியதாகவும், காயமடைந்த நான்கு மாணவர்கள் உட்பட ஐந்து பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் நேற்று இரவு (15.07) நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here