மதுபோதையில் ஒருவர் பாம்பை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை கடித்து விழுங்கியுள்ளார்.
இதைப் பார்த்த அவரது தாயார் பாம்பை வெளியில் எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.







