வட்டுக்கோட்டையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பதற்றம்

50
0
Spread the love

 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த
பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மூளாய் பகுதியில் நேற்று (20.07) இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு குழுக்களிடையே இடம்பெற்ற இந்த மோதலில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிளொன்றும்
முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here